எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இருவர் காயம்!

74 0
எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (11) காலை கதிர்காமத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமம் கடற்படை விடுதியில் தங்கியிருந்த இருவரும், இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் உணவு தயாரித்துக்கொண்டிருந்தபோதே எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது.

இதில் மாத்தறை, கெக்கனதுர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணும் 36 வயதுடைய ஆணுமே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் கதிர்காமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திஸ்ஸமஹாராமவில்  உள்ள தெபரவெவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.