எஹெலியகொடையில் கோடாவுடன் சந்தேக நபர் கைது !

149 0

எஹெலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தெனிய பிரதேசத்தில்,கோடா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எஹெலியகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், பரகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடம் இருந்து, சட்டவிரோத மதுபானம் வடிப்பதற்கு பயன்படுத்தப்படும் 1069 லீற்றர் (06 பீப்பாய்கள்) கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.