கொழும்பு – காக்கைதீவு பகுதியில் லயன் மனோகரனின் தலையீட்டில் வடிகான் புனரமைப்பு நடவடிக்கை!

121 0

கொழும்பு மட்டக்குளி பகுதியில் உள்ள காக்கைதீவின் முதலாம், இரண்டாம், 6ஆம் ஒழுங்கைகளில் உள்ள வடிகான்களின் அமைப்பு சீரற்ற நிலையில் இருந்தமையால் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினராக லயன் மனோகரன் இருந்தபோது, மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டத்துக்குட்படுத்தி அவற்றை மீள் நிர்மாணிப்பதற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாநகர சபையின் பொருளாளர் அதனை முன்மொழிந்து தற்போது மீள் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துள்ளார்.

இந்த நிர்மாணப் பணிக்காக சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மீள் நிர்மாணப்பணிகள் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் லயன் மனோகரனின் கண்காணிப்பின் கீழ் இடம்பெறுகின்றன.