”43 முன்னாள் எம்.பிக்கள் 1.2 பில்லியன் ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளனர்”

80 0

அரகலய போராட்டங்களின் போது தங்கள் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக சுமார் 43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 1.2 பில்லியன் ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டினார்.

தங்கள் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மிகைப்படுத்தி மதிப்பிடுமாறு அரசாங்க அதிகாரிகளை வற்புறுத்தி அவர்கள் பெரும் இழப்பீடுகளை கோரியுள்ளனர் என்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லொக்குகே, நிமல் லன்சா மற்றும் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட 43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையே ரூ. 95.9 மில்லியன், ரூ. 93.4 மில்லியன், ரூ. 74.9 மில்லியன், ரூ. 69.2 மில்லியன் மற்றும் ரூ. 56.1 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளனர் என்று ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“இயற்கை பேரிடரின் போது முழுமையான சொத்து இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டாலும் கூட, அதற்கான அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை ரூ. 2.5 மில்லியன் ஆகும்,” என்று அமைச்சர் ஜெயதிஸ்ஸ கூறினார், பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தத் தொகை கிடைப்பது சாத்தியமில்லை என்றும் கூறினார்.

முன்னாள் அரசாங்க உறுப்பினர்கள் வழக்கமான வரம்புகளுக்கு அப்பால் அதிகப்படியான இழப்பீட்டைப் பெற அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டதாக ஜெயதிஸ்ஸ குற்றம் சாட்டினார்.