மீளப் பெறப்பட்ட பிடியாணை

104 0

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து ஆஜர்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டயனா கமகே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையானதைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணையை மீளப் பெற உத்தரவிட்டது.