கந்தானையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

111 0

கந்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புனித செபஸ்தியார் மாவத்தை மற்றும் ரிலவுல்ல ஆகிய பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தானை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கந்தானை பகுதியில் வசிக்கும் 21 மற்றும் 29 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 06 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயினும் மற்றையவரிடமிருந்து 05 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயினும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.