பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “கணேமுல்ல சஞ்சீவ” கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ நீண்ட நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி கணேமுல்ல சஞ்சீவ சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
சட்டத்தரணியின் கோரிக்கையை நிராகரித்த நீதவான், கணேமுல்ல சஞ்சீவவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

