உயர்தரமான தயாரிப்புகளை பொது மக்களுக்கு வழங்கும் நோக்குடன், ஆயுர்வேத மருந்து பொருட்கள் மற்றும் ஆயுர்வேத அழகு சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து தயாரிப்புகளினதும் தரநிலை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பணிபுரி விடுத்துள்ளார்.
ராஜகிரிய ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையில் நடைபெற்ற விழா ஒன்றின் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
ஆயுர்வேத துறை தயாரிப்புகளின் நிர்ணயம் பொறுப்பற்றதாக இருக்குமாயின், பொதுமக்களுக்கு உயர்தரமான பொருட்களை விநியோகிக்க முடியாது. சமீப காலமாக ஆயுர்வேத தயாரிப்புகளின் தரணமயம் தொடர்பில் பல புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆயுர்வேத மருத்துவம் மற்றும் ஆயுர்வேத அழகுத் துறையில் உள்ள அனைத்துப் பொருட்கள் மீதும் மிகுந்த கவனம் செலுத்தி அவற்றை தர நிர்ணயத்துக்கு உட்படுத்துவது அவசியம். தேசிய மருத்துவ முறையை மேம்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும்.
மேலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேசிய மருத்துவ முறையின் தனித்துவமான அம்சங்களை இனம் காண்பதுடன் அதனை சுற்றுலா துறையுடன் ஒன்றிணைத்து சுற்றுலா கை தொழிலை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும். சுற்றுலாத் துறை, மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவத்துடன் சுற்றுலாத்துறை வசதிகளை விரைவாக மேம்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
உயர்தரமான தயாரிப்புகளை பொது மக்களுக்கு வழங்கும் நோக்குடன், ஆயுர்வேத மருந்து பொருட்கள் மற்றும் ஆயுர்வேத அழகு சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து தயாரிப்புகளினதும் தரநிலை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

