கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ன சேகர தலைமையில்“கிளீன் ஸ்ரீலங்கா ”என்னும் தொனிப்பொருளில் தூய்மைப்படுத்தும் விஷேட வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை (01) திருகோணமலை நகரில் நடை பெற்றது.
குறிப்பாக ஆளுநர் செயலகம் தொடக்கம் கடற்படை தளம் வரையுமான கரையோர பிரதேசம் ஆளுநரின் வழிகாட்டலின் கீழ் திருகோணமலை நகராட்சிமன்றம், பட்டனமும் சூழலும் பிரதேச சபை மற்றும் அனைத்து அரச அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரினதும் பங்குபற்றுதலில் பெருந்திரளான உத்தியோகத்தர்கள் கலந்துகெ்கொண்டனர்.






