சேருநுவர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது !

108 0
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தபுர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சேருநுவர பொலிஸ் நிலைய நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் நேற்று சனிக்கிழமை (01) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 69 வயதுடைய மஹிந்தபுர  பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

இது தொடர்பான  மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.