ஹபரணையில் பஸ் – வேன் விபத்து ; இருவர் உயிரிழப்பு ; 25 பேர் காயம்

82 0
ஹபரணை, கல்வங்குவ பிரதேசத்தில்,  இன்று சனிக்கிழமை (01) பஸ் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.