வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் இரத்தினபுரி, அங்கம்மன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த ஜீப் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் இரத்தினபுரி பிரதேசத்தில் வசிக்கும் 43, 45 மற்றும் 47 வயதுடையவர்கள் ஆவர்.
மேலும், சந்தேக நபர்களை இன்று புதன்கிழமை (29) இரத்தினபுரி நீதிமன்றில் ஆஜர்படுத்த வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

