வடக்கு, கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் தொடர் உண்ணாவிரத கவனயீர்ப்பு போராட்டம்

80 0
வடக்கு, கிழக்கு வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் உண்ணாவிரத கவன ஈர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை (29) கிழக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பமானது.

வடக்கு, கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

“அரசாங்கம் இனியும் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக எங்களுக்கான அரச வேலைவாய்ப்பை பரீட்சை இன்றி உறுதிப்படுத்து” என்ற கோரிக்கைக்கு அமைவாக இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்று வருகின்றது.

தேர்தல் காலங்களில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கி இருந்த போதும் வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகள் தொடர்பில் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சிறந்த தீர்வினை பெற்று தருமாறு கோரியும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.