வரவு – செலவுத் திட்டத்தில் நாடு திரும்ப வேண்டிய திசையை நாம் காண்பிப்போம்!-அநுரகுமார

78 0

நாம் சூழ்ச்சி செய்து ஆட்சிக்கு வரவில்லை.நாடு சரியான இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.இதற்கு காரணம் மக்கள் சார்பான அரசாங்கம் தோற்றம் பெற்றமையாகும். இரண்டு வருடங்கள் நிறைவடையும் போது நாம் திட்டமிடப்பட்ட அபிவிருத்திகள் நிறைவடையும்.வரவு செலவுத் திட்டத்தில் நாடு திரும்ப வேண்டிய திசையை நாம் காண்பிப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கெக்கிராவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

நாடு சரியான திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.காரணம் கடந்த பல தசாப்தங்களாக அரசாங்கங்கள் பரம்பரை பரம்பரையாக தோற்றம் பெற்றது.எனினும் இலங்கையில் முதற்தடவையாக பரம்பரையற்ற அரசாங்கம் ஒன்று உருவாகியுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அரசாங்கங்கள் உருவாகின.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.சூழ்ச்சி செய்து அரசாங்கங்களை உருவாக்கினார்கள்.

ஆனால் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் சூழ்ச்சி செய்து ஆட்சிக்கு வரவில்லை.பணத்தை இறைத்து ஆட்சிக்கு வரவில்லை.ஊடக பலத்தை காண்பித்து அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவில்லை. பரம்பரையும் நாம் பயன்படுத்தவில்லை.அவ்வாறாயின் எமது அரசாங்கம் எவ்வாறு உருவாக்கப்பட்டது.இங்குள்ள மக்கள் கிராமப்புறங்களுக்கு சென்று எம்மை பற்றிக்கூறி ஆட்சியைப் பெற்றுத் தந்தார்கள். அதனால் இந்த மக்கள் தொடர்பில் எமக்கு பொறுப்பும் இணைப்பும் உள்ளது.

இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் போது திட்டமிட்டப்ட்ட அபிவிருத்pதகள் நிறைவடைந்திருக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம். இன்னும் எமது அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தை கூட சமர்பிக்கிவல்லை. அதனால் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி புதிய வரவு செலவுத்திட்டத்தை சமர்பிப்போம்.அந்த வரவு செலவுத்திட்டத்தில் நாடு திரும்ப வேண்டிய திசையை நாம் காண்பிப்போம் என்றார்.