காலியில் ரெடிசன் கலெக்ஷன் ரெசோர்ட் ஹோட்டல் திறப்பு!

92 0

இலங்கையின் சுற்றுலா மற்றும் உபசரிப்புத் துறைக்கு இந்த உலகத் தரம் வாய்ந்த அனுபவங்கள் சேர்ந்துள்ளமையானது ஒரு  முதன்மையான சுற்றுலாத் தலமாக எமது தேசத்தின் திறனை எடுத்துக்காட்டுகிறது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

காலியில் ரெடிசன் கலெக்ஷன் ரெசோர்ட் ஹோட்டல் (Radisson Collection Resort) விடுதியின் உத்தியோகபூர்வ திறப்பு விழாவில் விஜித்த ஹேரத் பங்கேற்புடன் இன்று திங்கட்கிழமை (27) நடைபெற்றுள்ளதாக தனது முகப்புத்தக பதிவில் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காலியின் அழகை உலகுக்கு எடுத்துகாட்டுவதற்கான ரெடிசன் குழுவின் இந்த முயற்சியைப் பெரிதும் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.