சட்டவிரோதமாக புதையல் தோண்டிய தேரர் உட்பட மூவர் கைது

86 0

தீகவாபிய வெஹெரகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக கூறப்படும்  தேரர் உட்பட மூன்று பேர் எரகம பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மெற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹியோவிட்ட பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் தேரர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய சந்தேக நபர்கள் குருவிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.