இரு வௌிநாட்டவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து

89 0
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை குயில்வத்தை பகுதியில் முச்சக்கரவண்டியொன்று அதன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டவர்கள் இருவர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் இரண்டு பேரும் ஸ்லோவாக் நாட்டவர்கள் என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டத்துக்குள் கவிழ்ந்து வீழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியை வாடகைக்குப் பெற்று, அதில் பயணித்த இரண்டு வெளிநாட்டவர்களில் ஒருவர் முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார்.

காயமடைந்த இருவரின் நிலை மோசமாக இல்லை எனக் கூறும் வட்டவளை பொலிஸார், முச்சக்கரவண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.