மொரகஹஹேன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் நேற்று சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 43 வயதுடைய ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி துப்பாக்கி மற்றும் 05 உயிருள்ள தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

