வாழைச்சேனையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரின் சடலங்களும் கண்டுபிடிப்பு!

94 0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் – புலிபாய்ந்த கல் வீதியை குறுக்கறுத்துச் சென்ற வெள்ள நீரில் நேற்று (25) அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன இருவர் இன்று (26) சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டனர்.

சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 71, 52  வயதுகளை உடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.