4,500 மெற்றிக் டொன் உப்பு இறக்குமதி

100 0

இந்தியாவில் இருந்து  4,500 மெற்றிக் டொன் உப்பு, ஜனவரி 27 ஆம் திகதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென, அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. AN

இறக்குமதி செய்யப்படும் உப்பு முதல் தொகுதியை நாட்டுக்கு பெற்றுக்கொள்ளவுள்ளதாக, அதன் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனவரி 31ஆம் திகதிக்குள் கூடுதலாக 12,500 மெட்ரிக் டொன் உப்பு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து உப்பு கொண்டு வர, இரண்டு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய பருவமழை காலத்தில் உள்ளூர் உப்புமாக்கள் எதிர்கொண்ட சவால்களை அடுத்து உப்பு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது