துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை குட்டி காயம்

110 0
கந்தளாய், சூரியபுரம் பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை குட்டி ஒன்று காயமடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

03 வயது மதிக்கத்தக்க யானை குட்டி ஒன்றே காயமடைந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் யானை குட்டியின் கால் மற்றும் வயிற்றுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிரிந்தலை கால்நடை வைத்தியர் சமீர களிங்குஆராச்சி தலைமையிலான குழுவினரால் யானை குட்டிக்கு நேற்று வியாழக்கிழமை (23) சிகிச்சை அளிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.