கிரிபத்கொடையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு – ஆறு பேர் கைது !

108 0

கிரிபத்கொடை, மாயா மாவத்தை பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆறு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை (23) கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நுவரெலியா, நாவலப்பிட்டி, கிரிபத்கொடை, பொம்புவல, நாரம்மல மற்றும் குருணாகல் ஆகிய பகுதிகளை வசிப்பிடமாக கொண்ட 30 மற்றும் 47 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடம் இருந்து, 4000 வெளிநாட்டு மதுபான போத்தல்கள்,சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், லேபல்கள், போத்தல்கள் மற்றும் பீப்பாய்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.