சர்வமத தலைவர்களும் இணைந்த தர்மசக்தி அமைப்பின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வு

95 0

கொழும்பு செட்டித்தெரு கல்யாண முருகன் மண்டபத்தில் சர்வமத தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் தைப்பொங்கல் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை (15) நடைபெற்றது.

நாட்டின் சர்வமத தலைவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தர்மசக்தி அமைப்பின் ஏற்பாட்டில் இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

அமரபுர நிக்காயவின் மஹாநாயக்க தேரர் அஸ்ஸஜி நாயக்க தேரர், மேற்படி அமைப்பின் செயலாளர் அருட்தந்தை அனுர பெரேரா, உபசெயலாளர் சிவஸ்ரீதர்சக சர்மா குருக்கள், பொருளாளர் பிர்தௌஸ் மௌலவி ஆகியோர் இணைந்து இப்பொங்கல் நிகழ்வினை ஒழுங்குப்படுத்தியிருந்தனர்.