பாணந்துறையில் டிப்பர் வாகனத்தில் மணல் கடத்திய நால்வர் கைது

95 0
பாணந்துறை, பின்வத்தை கடற்கரையில் டிப்பர் வாகனத்தில் மணல் கடத்தியதாக கூறப்படும் நான்கு சந்தேக நபர்கள் இன்று புதன்கிழமை (15)  அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

பின்வத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் நால்வரும் இன்றைய தினம் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.