தைப்பொங்கலை முன்னிட்டு திருமலையில் விசேட சுற்றிவளைப்பு

135 0
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று (12) திருகோணமலையில் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது திருகோணமலை நகரில் அரிசி விலையை அதிகரித்து விற்பனை செய்த இரு கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒரு கடையில் சிவப்பு அரிசி 280 ரூபாவுக்கும் இன்னொரு கடையில் வெள்ளை பச்சை அரிசி 270 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்திய பின்னர், இரு கடைகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடை உரிமையாளர்கள் ஆகக் குறைந்தது ஒரு லட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்த நேரிடலாம் என நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.