தலங்கமவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

142 0

தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்வத்த பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலுக்கு அமைய  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே நேற்று சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கொஸ்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.