வெலிக்கடையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

112 0

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரி சபுமல் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே நேற்று சனிக்கிழமை (11) சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இராஜகிரி பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.