விபத்துகளில் வாகன உதிரிப்பாகங்கள் மோதுவதாலேயே அதிக உயிரிழப்புக்கள் பதிவாகின்றன

62 0

வாகன விபத்துக்களின் போது வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள உதிரிப்பாகங்கள் பயணிகளின் உடலில் மோதுவதால் உயிரிழப்புக்கள் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். 

பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உதிரிப்பாகங்களை அகற்றுவது தொடர்பில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இவ்வாறான உதிரிப்பாகங்கள் பயணிகளின் உயிருக்கு மிகவும் ஆபத்தானதாகும்.

முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்களுடன் மோதுவதால் உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக பிரேத பரிசோதனைகளின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற சட்ட வைத்திய நிபுணர் வைத்தியர் சுமித் அம்பேபிட்டிய தெரிவித்துள்ளார்.