நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் தந்தை இயற்கை எய்தினார்

210 0

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் தந்தையார் இன்று அதிகாலை இயற்கை எய்தியுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 80 வயதான முத்தையா சிவப்பிரகாசம் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று காலை காலமானார்.
இதேவேளை அன்னாரின் இறுதி சடங்குகள் அவரது இல்லத்தில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகனின் தந்தையான  (அதிபர்) முத்தையா சிவப்பிரகாசத்தின்  இறுதிக்கிரியைகைகள்  புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அருகாமையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 02-05-2017 அன்று செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.