மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.சரத் திசாநாயக்க மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இவ்விருவரின் பெயர்களும் அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டன.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான திஸாநாயக்க மற்றும் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடுத்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளனர்.

