பேருந்து கட்டண குறைப்பு என்பது தொலைதூர கனவாக மாறியுள்ளது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைப்பு குறித்த அரசாங்கத்தின் தீர்மானங்களால் பேருந்து கட்டண குறைப்பு என்ற மக்களின் எதிர்பார்ப்பு தொலைதூர கனவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
புதியஅரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் பேருந்து கட்டணங்கள் குறையும் என மக்கள் எதிர்பார்த்தார்கள் இந்தவருட ஆரம்பத்தில் எரிபொருள் விலைகள் குறையும் என எதிர்பார்த்தோம் ஆனால் தற்போது அது கனவாக மாறியுள்ளது என கெமுனுவிஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணங்களை குறைக்கவேண்டும் என்றால் எரிபொருட்களின் விலைகளை 30 ரூபாயினால் குறைக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அதேவேளை எரிபொருள் விலைகளை மாத்திரமல்ல உதிரிப்பாகங்கள் போன்றவற்றின் விலைகளையும் குறைக்கவேண்டும்,தனியார் பேருந்து சேவை மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளதுஎங்கள் செலவீனங்களை சமாளிப்பதற்காக ஜூலைக்கு பின்னர் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

