அநுராதபுரம், ஒயாமடுவ , மாணியங்கமுவ பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் ஒயாமடுவ பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒயாமடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம், எலயாபத்துவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட 56 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் இந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒயாமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

