சுப்பர் ஓவரில் வென்றது மும்பை இன்டியன்ஸ்

265 0

இதன்படி, 34வது போட்டியில் ரைசிங் பூனே சுபர்ஜெயன்ட் அணி வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் ரைசிங் புனே சுப்பர்ஜயன்ட் மற்றும் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்குளுர் ஆகிய அணிகள் மோதின.

போட்டியில் முதலில் துடுப்பாடிய ரைசிங் புனே சுப்பர்ஜயன்ட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய ரோயல் செலன்ஜர்ஸ் பெங்குளுர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

இதேவேளை, ஐபிஎல் தொடரின் 35 ஆவது போட்டி தற்சமயம் குஜராத் லயன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றன.

இந்த போட்டியில் மும்பை இந்தியனர்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றிப்பெற்றது.

போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிவரும் குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த மும்பை இந்தியனர்ஸ் அணியும் 20 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 153 ஓட்டங்களையே பெற்றது.

இதன்படி, மேலதிகமாக வழங்கப்பட்ட சுப்பர் ஓவரில், துடுப்பாடிய மும்பை இன்டியன்ஸ் அணி 2 விக்கட்டுக்களை இழந்து 11 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த லயன்ஸ் அணிக்கு 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.