அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியோற்று 100வது நாள் பூர்த்தி விழா நேற்று பென்சன்வேனியாவில் இடம்பெற்றது.
இதன்போதே அவர் ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார்.
அமெரிக்காவின் தற்போதைய கொள்கைகள் குறித்து ஊடகங்கள் தவறான கருத்துக்களை வெளியிடுவதாக குறிப்பிட்ட ட்ரம்ப், ஊடகங்கள் அதனை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, தாம் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் இதன்போது குறிப்பிட்டார்.