கண்டி , பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடம்வலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (30) இரவு இடம்பெற்றுள்ளது.
வேன் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில், மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த பெண்ணொருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கண்டி, பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஆவார்.
படுகாயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

