தம்பகல்ல பகுதியில் கோடாவுடன் ஒருவர் கைது

76 0

மொனராகலை மாவட்டம் தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடுமுல்ல பகுதியில் நேற்று புதன்கிழமை (25) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உடுமுல்ல, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.

சந்தேக நபரிடமிருந்து 509 லீற்றர் கோடா அடங்கிய 03 பீப்பாய்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.