வனப்பகுதியில் கட்டுதுவக்கு வெடித்ததில் ஒருவர் பலி

73 0

மாத்தளை, நாவுல, அம்பகஹதெவொல வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுதுவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம்  நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மாத்தளை, கொங்கஹவெல  பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.

இவர் நேற்றைய தினம் அம்பகஹதெவொல வனப்பகுதிக்கு சென்றிருந்த போது, விலங்குகளை வேட்டையாடுவதற்காக இனந்தெரியாத நபரொருவரால் வைக்கப்பட்டிருந்த கட்டுதுவக்கு வெடித்ததில் பலத்த காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்தவர் அம்பன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.