அரலகங்விலயில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது !

82 0

அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹதமன பகுதியில், உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அரலகங்வில முகாமின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹதமன பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக  அரலகங்வில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான , மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.