ராகம பகுதியில் கோடாவுடன் ஒருவர் கைது

78 0

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வயல் பகுதியில் சட்ட விரோத மதுபானம் வடிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோத மதுபானம் வடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் 7182.5 லீற்றர் (36 பீப்பாய்கள்) கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ராகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.