ஏமனில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல்: 8 அல்கொய்தா தீவிரவாதிகள் பலி

208 0

ஏமன் நாட்டில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் 8 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகன் தகவல் தெரிவித்துள்ளது.

ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேசமயம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அமெரிக்காவும் இணைந்து கொண்டுள்ளது.

இந்நிலையில், ஏமன் நாட்டில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் 8 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகன் தகவல் தெரிவித்துள்ளது. இதில் முக்கியமான தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

ஏமனின் ஷப்வா மாகாணத்தில்  இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா வான்வெளி படையின் செய்தி தொடர்பாளர் ஜெப் டேவிஸ் தெரிவித்துள்ளார்.