கண்டி , வத்தேகம நகரத்தில் கடந்த சனிக்கிழமை (14) கார் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் மாத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை மற்றும் உடிஸ்பத்துவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 46 மற்றும் 48 வயதுடையவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர், விபத்தினை ஏற்படுத்திய காரை மறைத்து வைப்பதற்கு பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வத்தேகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

