இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் பயணித்த உயர் தர மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி, கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய உயர் தர மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற உயர் தர மாணவியின் தந்தைக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

