வத்தேகம நகரில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

89 0

வத்துகாமம்  நகரில் கண்டெடுக்கப்பட்ட சடலம் மாத்தளை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பிரத்தியோக உதவியாளராக கடமையாற்றியவரின் சடலம்  அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்  வாகனம் ஒன்றால் மோதப்பட்டதால் இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

வத்துகாமம் நகரில் இடம் பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

பாதை ஓர வடிகாண் ஒன்றில் மீது விழுந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் மாத்தளை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பிரத்தியோக உதவியாளராக கடமையாற்றியவரின் சடலம் என  அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் வாகனம் ஒன்றால் மோதப்பட்டுள்ளமை அருகில் இருந்த கட்டிடம் ஒன்றின் சீ.சீ.டி.வி  காட்சிகள் மூலம் அவதானிக்க முடிந்ததாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் அதிகாலை வேளையில் நடைபயிற்சியில் ஈடுபடச் சென்றதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகள் மூலம் அறிய முடிந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் வத்தேகம நாரன்தண்ட பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வத்தேகம  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.