கண்டி, பல்லேகல பிரதேசத்தில் நடைபெற்றுவரும் “லங்கா ரி 10 சூப்பர் லீக்” கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் கோல்மார்வல் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜையை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மேற்கு இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடுமாறு கோரியுள்ளார்.
பின்னர், குறித்த கிரிக்கெட் வீரர் இது தொடர்பில் விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவில் முறைப்பாடு வழங்கியதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

