இலங்கைக்கான உரங்களை ஐரோப்பிய ஒன்றிய நாடு தடுத்துவைத்திருந்தது – ரஸ்ய தூதுவர்

82 0

இலங்கைக்கு  இலவசமாக வழங்கப்பட்ட உரத்தினை வழங்குவதை ஐரோப்பிய ஒன்றிய நாடு தடுத்துவைத்தது என  இலங்கைக்கான ரஸ்ய தூதுவர்லெவன் எஸ். ட்ஜகார்யன் தெரிவித்துள்ளார்.

உலக உணவுதிட்டத்தின் கீழ் இலவசமாக இலங்கைக்கு உரங்களை வழங்குவதை ஐரோப்பிய ஒன்றியம்தடுத்தது என தெரிவித்துள்ள அவர் இந்த உரம் வந்துசேருவதற்கு ரஸ்ய தூதரகம் இரண்டரை வருடங்களாக காத்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் ரஸ்யாவிற்கு விதித்துள்ள சட்டவிரோத தடை காரணமாக ஐNருhப்பிய ஒன்றிய நாடான லட்வியாவில் இந்த உரங்கள் தடுக்கப்பட்டன  என  குறிப்பிட்டுள்ள அவர் இறுதியாக நாங்கள் எங்கள் நண்பர்களுடன் இணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வை கண்டோம் உரங்கள் இலங்கை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தன என குறிப்பிட்டுள்ளார்.