யாழ்ப்பாணம் வரணி பகுதியில் ஐவர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. அதனால் 07 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் சிலருக்கு எலிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரணி பகுதியைச் சேர்ந்த ஐவர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மோசமானதால், அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

