மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

95 0

தென்கிழக்கு  வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகவிருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில்  இலங்கையின்வடக்குக் கரையை அண்டியதாக தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்  கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனவே கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் இன்று (11ஆம் திகதி) நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடும்.