மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான ஒன்று கூடல் நேற்று மாலை இடம்பெற்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது களப் பணியாற்றிய நிறுவனங்கள், அனைத்து பள்ளிவாயல்கள் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஒன்று கூடல் நடைபெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் தௌபீக் தலைமையில் நடைபெற்ற ஒன்று கூடலில்,
அனர்த்த முன்னாயத்தம் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் இதற்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

