துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான “லலித் கன்னங்கர“ துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
“லலித் கன்னங்கர“ என்பவர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் துபாய் பொலிஸாரிடம் கலந்துரையாடியதையடுத்து இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரியவந்துள்ளது.
“லலித் கன்னங்கர“ என்பவர ஒரு வருடத்திற்கு முன்னர் துபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

