நவாஷ் ஷெரீப் உடன் இந்திய தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் திடீர் சந்திப்பு

249 0

பாகிஸ்தான் பிரதமர நவாஷ் ஷெரீப்பை இந்திய தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் சந்தித்தார். இந்த சந்திப்பை பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளது.

இந்திய தொழிலபதிபர் சஜ்ஜன் ஜிண்டால் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் முக்கிய பகுதியாக பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பை ஜிண்டால் சந்தித்தார்.

இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முர்ரி என்ற மலைப் பகுதியில் உள்ள பிரதமரின் தனியார் குடியிருப்பில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது பாகிஸ்தான் மற்றும் அந்த நிறுவனத்துடன் உள்ள வர்த்தக உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்பை பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளது. இந்திய பிரதமர் மோடிக்கும், ஷெரீப்புக்கு  இடையில் ரகசியம் பேசுவதாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.

இந்த சந்திப்பு குறித்து நவாஸ் ஷெரீப்பின் மகள் மர்யம் கூறுகையில், “ஜிண்டல் எனது தந்தையின் பழைய நண்பர். இந்த சந்திப்பில் ரகசியம் எதுவும் இல்லை” என்றார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 2015-ம் ஆண்டு திடீரென பாகிஸ்தான் பயணம் செய்து நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததே தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால்தான் என தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.